வெளியிடப்பட்ட நேரம்: 14:22 (04/07/2014)

கடைசி தொடர்பு:15:02 (04/07/2014)

மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் நீக்கத்துக்கு இடைக்கால தடை!

புதுடெல்லி: மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் பதவி நீக்கத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி மதிவாணனை நியமனம் செய்ததில் விதிமீறல் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கல்யாணியை பதவி நீக்கம் செய்ய ஆணையிட்டனர்.

இதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கல்யாணி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கல்யாணி மதிவாணன் பதவி நீக்கத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், இதுகுறித்து, தமிழக ஆளுநர், யு.ஜி.சி., காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் மனுதாரர்கள் 2 பேர் ஆகியோர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்