அரியலூரில் 1948-ம் ஆண்டு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் தொடங்கப்பட்டது. பழைமையான பால் சொசைட்டிகளில் இதுவும் ஒன்று. இங்கு அலுவலகப் பணியாளர்கள், விற்பனையாளர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் வேலைபார்த்து வருகின்றனர். இந்நிலையில், அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சுமார் 100 மையங் களிலிருந்து பால் கொள்முதல் செய்யப்படுகிறது. நாள்தோறும் 20,000 லிட்டர் பால் கொள்முதல் செய்த நிலையில் 12,000 லிட்டர் பால் ஒன்றியத்துக்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு அனுப்படுகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில்,மீதமுள்ள பாலை சில்லறை விற்பனைக்கும், பால் (கார்ட்) அட்டைக்கும் வழங்கப்படுகின்றன. அரியலூர் மாவட்டத்தில் அதிகம் வருமானம் தரக்கூடிய பால் சொசைட்டியாக இது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இங்குச செயலாளராக இளங்கோவன் என்பவர் பணிபுரிந்து வந்தார்.
இந்த பால் சொசைட்டியில் பல முறைகேடுகள் நடப்பதாகவும் நிர்வாகம் சரியாகச் செயல்படவில்லை என்றும் பால்வளத்துறை அமைச்சர் மற்றும் பால்வளத்துறை இயக்குநர் ஆகியோருக்கு தொடர்ந்து பல புகார்கள் சென்ற நிலையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
பால் சொசைட்டி விதிமுறைகளை மீறி எல்லை தாண்டி பால் கொள்முதல் செய்வது, அத்தோடு உறவினர்கள் மற்றும் வேண்டப்பட்டவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது, விற்பனை செய்யப்பட்ட தொகையைக் கணக்கில் போடுவதில்லை என்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகை பணம் கொடுக்காதது போன்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்ததைத் தொடர்ந்து பால்வளத்துறையில், சட்ட விதிமுறைகளுக்குப் புறம்பாகச் செய்யப்பட்டதால் சங்க செயலாளர் இளங்கோவன், கிளார்க் சேகர், கேஷியர் ஆனந்த் ஆகிய 3 பேரை சஸ்பெண்ட் செய்ய பால்வளத்துறை பதிவாளர் பார்த்திபன் உத்தரவிட்டிருக்கிறார்.

அதன் பெயரில் பால்வளத் தலைவர் பன்னீர்செல்வம் இந்த மூன்று பேரையும் தற்காலிகப் பணி நீக்கம் செய்ய உத்தரவு வழங்கினார். தற்போது பால் சொசைட்டி செயலாளராகச் செந்துறை கொளஞ்சிநாதன் பொறுப்பு செயலாளராகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.