Published:Updated:

`வயநாட்டிலிருந்து மது வாங்கிச் சென்ற நபர்; மூடப்பட்ட 3 டாஸ்மாக் கடைகள்!' - அச்சத்தில் நீலகிரி

சோதனைச்சாவடி
சோதனைச்சாவடி

கேரள மாநிலம் வயநாடு சாரல் பகுதியில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபருடன் நேரடித் தொடர்பில் இருந்த ஒருவர், நீலகிரியில் உள்ள டாஸ்மாக்கில் மது வாங்கிச் சென்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

கேரள மாநிலம் வயநாடு சாரல் பகுதியைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தி, பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர், சுகாதாரப் பணியாளர்கள்.

ooty tasmac
ooty tasmac

கொரோனா உறுதிசெய்யப்பட்ட நபருடன் நேரடி தொடர்பில் இருந்த ஒருவரின் டிராவல் ஹிஸ்டரியை விசாரித்ததில், அந்த நபர் தமிழக எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்து வரிசையில் நின்று மது வாங்கிச்சென்றது தெரியவந்தது.

டெல்லி சென்று திரும்பிய 8 பேர்.. மூடப்பட்ட மூன்று பகுதிகள்.. கொரோனா அச்சத்தில் ஊட்டி!

உடனடியாக இங்குள்ள அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, நம்பியார்குன்னு, தாளூர், நாடுகாணி உள்ளிட்ட மூன்று மதுக்கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டு, பணியில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

tasmac
tasmac

இதுகுறித்து சுகாதாரத்துறை அலுவலர் நம்மிடம் பேசுகையில், " கொரோனாவாலும் பிரிக்க முடியாத பந்தத்தை கேரள மாநிலத்தின் வயநாடு, தமிழகத்தின் கூடலூர்-பந்தலூர் பகுதிகள் கொண்டுள்ளன. கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தீவிர கண்காணிப்புகள் இருந்தபோதிலும், இரண்டு மாநில மக்களும் சர்வசாதாரணமாக எல்லைகளை நடந்தே கடக்கின்றனர்.

கொரோனா உறுதிசெய்யப்பட்ட நபருடன் நேரடி தொடர்பில் இருந்த ஒருவர், இங்கு வந்து மது வாங்கிச்சென்றுள்ளார். முன்னெச்சரிக்கையாக 3 மதுக்கடைகளும் மூடப்பட்டு, அதில் பணியாற்றிய மதுக்கடை ஊழியர்கள், 3 காவல்துறையினர், 5 ஊர்க்காவல் படையினர் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன" என்றார்.

`காலாவதி சாக்லேட்டுகள், பேக்கரி பொருள்கள்!' - அதிர்ச்சியில் உறைந்த ஊட்டி உணவுத்துறை அதிகாரிகள்
அடுத்த கட்டுரைக்கு