Published:Updated:

UPS வெடித்து உயிரிழந்தனரா மூன்று பெண்கள்; கோவை விபத்தில் நடந்தது என்ன?

தீ விபத்து

``யுபிஎஸ் பேட்டரியில் இருந்து சோபா, டிவி உள்ளிட்ட மற்ற பொருள்களுக்குத் தீ பரவியுள்ளது. அதை அவர்கள் அணைக்க முயன்றபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறோம்."

UPS வெடித்து உயிரிழந்தனரா மூன்று பெண்கள்; கோவை விபத்தில் நடந்தது என்ன?

``யுபிஎஸ் பேட்டரியில் இருந்து சோபா, டிவி உள்ளிட்ட மற்ற பொருள்களுக்குத் தீ பரவியுள்ளது. அதை அவர்கள் அணைக்க முயன்றபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறோம்."

Published:Updated:
தீ விபத்து

கோவை, துடியலூர் உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவருக்கு அர்ச்சனா மற்றும் அஞ்சலி என இரண்டு மகள்கள். விஜயலட்சுமியின் கணவர் ஜோதி லிங்கம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில், நேற்று காலை உறவினர் ஒருவர், அவர்கள் வீட்டுக்கு வந்தபோது புகை வருவதைப் பார்த்துள்ளார்.

தீ விபத்து
தீ விபத்து

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவலும் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த கவுண்டம்பாளையம் வடக்குத் தீயணைப்பு துறையினர், கதவை உடைத்து தீயை அணைத்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உள்ளே சென்று பார்த்தபோது, விஜயலட்சுமி மற்றும் அர்ச்சனாவின் சடலங்கள் சமையில் அறையிலும், அஞ்சலி சடலம் படுக்கை அறையிலும் காணப்பட்டுள்ளன. மேலும், அவர்கள் செல்லப்பிராணியாக வளர்த்து வந்த நாயும் இறந்துள்ளது.

சடலமாக
சடலமாக

இதுகுறித்து தீயணைப்புத்துறை கூறுகையில், ``முதல் கட்ட விசாரணையில், யூபிஎஸ் பேட்டரியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக புகை ஏற்பட்டுள்ளது. இதை அணைக்க அஞ்சலி மற்றும் அவரின் அம்மா முயன்றுள்ளனர். ஆனால், மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று கருதுகிறோம்.” என்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தகவல் அறிந்து அங்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜபாண்டியன், துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அர்ச்சனா
அர்ச்சனா

தடயவியல் துறையினரும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, ``இந்தப் பகுதியில் அவர்கள் 15 ஆண்டுகளாக குடியுள்ளனர். அர்ச்சனா, பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அஞ்சலி ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். காலை வீட்டில் இருந்து புகை வந்தபோதுதான் எங்களுக்குத் தீ விபத்து பற்றித் தெரிந்தது” என்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``யுபிஎஸ் பேட்டரியில் இருந்து சோபா, டிவி உள்ளிட்ட மற்ற பொருள்களுக்குத் தீ பரவியுள்ளது. அதை அவர்கள் அணைக்க முயன்றபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறோம்.

அஞ்சலி
அஞ்சலி

காரணம் அவர்கள் உடலில் எந்தக் காயமும் இல்லை. மின்கசிவு காரணமாகக் கோளாறு ஏற்பட்டு பேட்டரி வெடித்ததா அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா என்றும் விசாரித்து வருகிறோம். பிரேத பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகுதான் என்ன நடந்தது என்பது முழுமையாகத் தெரியவரும்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism