வெளியிடப்பட்ட நேரம்: 14:38 (02/08/2014)

கடைசி தொடர்பு:15:15 (02/08/2014)

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 8 பேர் படுகாயம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சிவகாசி அருகே விஸ்வநத்தத்தில் உள்ள பட்டாசு தயாரிக்கும் ஆலையில்தான் இன்று பிற்பகலில் இந்த வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.

தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் இரண்டு வண்டிகளில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கருந்திரி தயாரிப்பு பணியின்போது ஏற்பட்ட உராய்வில் தீப்பிடித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

காயம் அடைந்தவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்