சமச்சீர் கல்வி: மெட்ரிக் பள்ளிகளுக்கு பாமக எச்சரிக்கை

வேலூர், ஆக.11,2011

தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகள் சமச்சீர் கல்வியை ஏற்காமல் வேறு கல்வி முறைக்கு மாறினால் பாமக சார்பில் தீவிர போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எச்சரித்தார்.

சத்துவாச்சாரியில் நடைபெற்ற வேலூர் கிழக்கு மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்து அவர் பேசுகையில், "சமச்சீர் கல்விக்காக பாமக தொடர்ந்து போராடியது. முழுமையாக செயல்படுத்தாததால் அறைகுறையாக உள்ளது.

திராவிட கட்சிகள் ஆட்சி காலத்தில் கல்வி கொள்ளையர்கள் அதிகரித்து விட்டனர். இந்த கூட்டத் தொடரில் தமிழக அரசு மெட்ரிக் பள்ளிகளில் தமிழில் பாடம் நடத்த வேண்டும். தவறினால் பள்ளி அரசுடமையாக்கப்படும் என்ற புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்.  
 
மெட்ரிக் பள்ளிகள் சமச்சீர் கல்வியை ஏற்காமல் சி.பி.எஸ்.சி. தேர்வு முறை அல்லது வேறு கல்வி முறைக்கு மாறினால் பாமக சார்பில் தீவிர போராட்டம் நடத்தப்படும்," என்றார் ராமதாஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!