தமிழக பா.ஜ.க. புதிய தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்!

புதுடெல்லி: தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பா.ஜ.க.வைச் சேர்ந்த தமிழிசை சவுந்திரராஜன் பா.ஜ.க.வின் தேசிய செயலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவரை பா.ஜ.க.வின் தமிழக மாநில தலைவராக நியமனம் செய்து அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

தமிழிசை சவுந்திரராஜன் ஏற்கனவே, பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளராகவும், துணைத் தலைவராகராகவும் பணியாற்றியவர்.

மருத்துவரான தமிழிசை சவுந்தரராஜன் குமரி அனந்தனின் மகளாவார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!