தமிழகத்தில் டாஸ்மாக்கை அகற்ற போராட்டம் நடைபெறும்: தமிழிசை சவுந்தரராஜன் உறுதி!

புதுடெல்லி: தமிழகத்தில் டாஸ்மாக்கை அகற்ற போராட்டம் நடைபெறும் என்று தமிழிசை சவுந்தரராஜன் உறுதியளித்துள்ளார்.
 
டெல்லியில் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித் ஷாவை பாரதிய ஜனதாவின் தமிழக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசினார். அதன்பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தமிழகத்தில் டாஸ்மாக்கை அகற்ற போராட்டம் நடைபெறும்.

தமிழக மீனவர் பிரச்னை, இலங்கை தமிழர் பிரச்னை, முல்லைப்பெரியாறு உள்ளிட்ட பிரச்னைகளை எடுத்துரைக்கும் கருவியாக நான் செயல்பட இருக்கிறேன்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!