வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (04/10/2014)

கடைசி தொடர்பு:16:20 (04/10/2014)

போராட்டம் நடத்துவது ஏற்கதக்கதல்ல:அ.தி.மு.க.வுக்கு தமிழக பா.ஜ.க. கண்டிப்பு!

சென்னை:  சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்று  சிறையில் அடைக்கப் பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொது மக்களை கட்டாயப்படுத்தி, கடைகளை அடைக்க வைப்பது, போராட்டம் நடத்துவது ஏற்கதக்கதல்ல என்று தமிழக பா.ஜனதா தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார்.

சென்னையில் இன்று  செய்தியாளர்களிடம் பேசிய  தமிழிசை சௌந்தரராஜன்,"அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தண்டனை பெற்று ஜெயிலில் இருப்பது வருத்தத்துக்குரிய விஷயம்தான். இதில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது.

ஆனால் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறி பொது மக்களை கட்டாயப்படுத்தி கடைகளை அடைக்க வைப்பது, போராட்டம் நடத்துவது ஏற்கதக்கதல்ல. அதேபோல் நீதிபதி, பிரதமர் மோடி, மற்றும் தமிழக தலைவர்கள் பலரையும் தரக்குறைவாக விமர்சிப்பதும் கண்டனத்திற்குரியது" என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்