வெளியிடப்பட்ட நேரம்: 20:11 (06/10/2014)

கடைசி தொடர்பு:20:11 (06/10/2014)

பள்ளி, கல்லூரி விவகாரம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: பள்ளி, கல்லூரிகள் நாளை செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நாளை (7ஆம் தேதி) அனைத்து தனியார் பள்ளிகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, தி.மு.க. மற்றும் பா.ம.க. வழக்கறிஞர்கள், இது தொடர்பாக மனுகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை இன்று (6ஆம் தேதி) வந்தது. இதை விசாரித்த நீதிபதி, ''பள்ளி, கல்லூரிகள் நாளை (7ஆம் தேதி) வழக்கம்போல் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, பள்ளி, கல்லூரிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உறுதி அளித்தார்.

மேலும், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதேபோல், நீதிபதி குன்ஹாவை விமர்சித்து வைக்கப்பட்டுள்ள பேனர்கள் குறித்து விளக்கமளிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க