ரஜினி ஆதரித்தால் பா.ஜ. பலம்பெறும்: தமிழிசை செளந்தர்ராஜன்

சென்னை: ரஜினிகாந்த் ஆதரித்தால் தமிழகத்தில் பா.ஜனதா பலம் வாய்ந்த கட்சியாக மாறும் பா.ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் கூறியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில், மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் நடைபெற இந்த கூட்டத்தில் தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தர்ராஜன், தமிழ்நாட்டில் அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கி உள்ளதாக குற்றம் சாட்டினார்.

அரசு பணிகள் எதுவும் சரிவர நடைபெறவில்லை எனவும், அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் தமிழிசை தெரிவித்தார்.
 
மேலும் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மிகவும் கவலைக்குரியதாக உள்ளதால், இவற்றை களைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ரஜினிகாந்த் ஆதரவளிக்க வேண்டும்

நடிகர் ரஜினிகாந்தை பொறுத்தவரை மிகச் சிறந்த தேசிய சிந்தனை வாதி. எனவேதான் மோடியின் திட்டங்களை பாராட்டுகிறார். எனவே அவர் பா.ஜனதாவை ஆதரிக்க வேண்டும் என்று கூறுகிறோம். 2016 தேர்தலில் அவர் ஆதரித்தால் பா.ஜனதா பலம் வாய்ந்த கட்சியாக மாறும் என்று அவர் மேலும் கூறினார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!