மோடி நினைத்தால் ராஜபக்சேவை பதவியிலிருந்து தூக்கி எறிய முடியும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சென்னை: இந்திய பிரதமர் நரேந்திர மோடி நினைத்தால் இலங்கை அதிபர் ராஜபக்சேவை பதவியில் இருந்து தூக்கி எறிய முடியும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அவர், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சரிவர செயல்படவில்லை என குற்றம்சாட்டினார்.

மேலும் அவர் கூறுகையில்,"மத்திய அரசும், மாநில அரசும் மக்களுக்கு தொல்லை கொடுத்து வரும் நிலையில் விலைவாசி உயர்ந்து கொண்டே வருகிறது. இதனை காங்கிரஸ் கட்சி வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது. மத்திய அரசு ரயில் கட்டணத்தை உயர்த்தினாலும் சரி, தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தினால் சரி காங்கிரஸ் கட்சி தெருவில் இறங்கி போராடும்.

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி எப்படி செய்வீர்களோ, ஏது செய்வீர்களா என்று தெரியாது. ஆனால், பிரதமர் மோடி நினைத்தால் இலங்கை அதிபர் ராஜபக்சேவை பதவியில் இருந்து தூக்கி எறிய முடியும்.

2016ல் நாங்கள் தான் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம். இல்லையென்றால் நாங்கள் இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலையை உருவாக்குவோம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!