வெளியிடப்பட்ட நேரம்: 14:21 (08/11/2014)

கடைசி தொடர்பு:14:57 (08/11/2014)

பிரேமானந்தா ஆசிரமத்தில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர்!

திருச்சி: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை  அடுத்துள்ள  பிரேமானந்தா  ஆசிரமத்தை இலங்கை வடக்கு மாகாண  முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் நேரில் பார்வையிட்டார்.

இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், இலங்கை வடக்கு மாகாண முதலாவது முதல்வருமான சி. வி.விக்னேஸ்வரன்  இந்தியா வந்துள்ளார்.

நேற்று அவர், விராலிமலை அடுத்த  பாத்திமாநகரில் உள்ள பிரேமானந்தா  ஆசிரமத்திற்கு வந்தார். அவரை பிரேமானந்தா அறக்கட்டளை நிர்வாகிகள் வரவேற்றனர்.

இதைத்  தொடர்ந்து அங்குள்ள  சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் இரவு ஆசிரமத்தில் தங்கிய சி.வி.விக்னேஸ்வரன் இன்று அதிகாலை நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். பின்னர் ஆசிரமத்தில் செயல்படும் உயர்நிலை பள்ளி வளாகத்தில் மரக்கன்றினை நட்டார்.

விக்னேஸ்வரன் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைக் காவல்துறையினர் மேற்கொண்டிருந்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்