தமிழர் நலனுக்காக பாடுபட முடியவில்லை: முதல்வர் விக்னேஸ்வரன்!

சென்னை: தமிழர் நலனுக்காக பாடுபட முடியவில்லை என்று இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வருத்தத்துடன் கூறினார்.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டு பேசும்போது, ''இலங்கை வாழ் வடகிழக்கு தமிழ்பேசும் மக்கள் சார்பாக 1987 ஆம் ஆண்டில் ஏற்பட்ட உடன் படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டது.

ஒற்றை ஆட்சி அரசியல் சட்டத்தின் கீழ் உண்மையான அதிகார பகிர்வை எதிர்பார்க்க முடியவில்லை. அனைத்து அதிகாரங்களும் இலங்கை மத்திய அரசு (ராஜபக்சே) கையில் உள்ளது. அதனால், இலங்கை வடக்கு மாகாணத்தில் தமிழர் நலனுக்காக பாடுபட முடியவில்லை.

இந்தப் பகுதி இலங்கை ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது, அங்கு இந்த நிலைமை தான் உள்ளது. எங்களை சிங்கள அரசு செயல்பட விடாமல் தடுத்து வருகிறது. அதுதான் அவர்களது முக்கிய குறிக்கோளாகவும் உள்ளது. அதிகாரமில்லாத வடக்கு மாகாண சபையில் முதல்வராக ஏன் இருக்கிறீர்கள் என கேள்வி கேட்கிறார்கள்.

தமிழர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளது. தமிழர் கிழக்கு மாகாணத்தில் சிங்களர் ஊடுருவல்கள் அதிகரித்து வருகிறது. இலங்கை சுதந்திரம் பெற்றபோது, தமிழர் பகுதியில் 5 சதவீதம் பேர் மட்டுமே இருந்தனர். இப்போது, எண்ணிக்கை 35 சதவீதமாக அதிகரித்து விட்டது. தமிழக தலைவர்கள் உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!