வெளியிடப்பட்ட நேரம்: 11:03 (19/11/2014)

கடைசி தொடர்பு:11:03 (19/11/2014)

பஞ்சரான கார் 3 பேரை பலி கொண்டது: சென்னையில் சோக சம்பவம்!

சென்னை: வேகமாக வந்த கார் ஒன்று, திடீரென பஞ்சரானதால் சாலையோர கடைக்குள் புகுந்து மூன்று பேரை பலி கொண்டது. சென்னை பல்லாவரத்தில்தான் இந்த சோகம் சம்பவம் நடந்துள்ளது.

நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவன நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுரேஷ், அன்புராஜ் மற்றும் அர்ஜூன் ஆகியோர், இரவுப் பணி முடிந்து இன்று அதிகாலை காரில் தாம்பரத்திற்கு சென்றுகொண்டிருந்தனர். பல்லாவரம் அருகே சென்றபோது, காரின் டயர் பஞ்சரானதாக கூறப்படுகிறது.

இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த கடையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், சுரேஷ், அன்புராஜ் மற்றும் அர்ஜூன் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மேலும் இருவர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்