வெளியிடப்பட்ட நேரம்: 16:26 (22/11/2014)

கடைசி தொடர்பு:17:57 (22/11/2014)

ஆஸ்ரா கர்க்குக்கு மீண்டும் பதவி வழங்கியது தமிழக அரசு!

சென்னை:  கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டு இருந்த மதுரை மாவட்ட முன்னாள் போலீஸ் எஸ்.பி. ஆஸ்ரா கர்க்குக்கு, தமிழக அரசு மீண்டும் பதவி வழங்கியுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு மதுரை மாவட்ட ஆட்சியராக சகாயம் இருந்தபோது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ஆஸ்ரா கர்க் இருந்தார். இருவரும் கிரானைட் முறைகேட்டை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததையடுத்து அதிரடியாக மாற்றப்பட்டனர்.

இந்நிலையில் பணி நிமித்தமான பயிற்சிக்காக சென்றுவிட்டு திரும்பிய ஆஸ்ரா கர்க், கடந்த பல வாரங்களாக   கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில், சென்னை உதவி ஐ.ஜி.யாக ஆஸ்ரா கர்க்கை நியமித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

சென்னை உதவி ஐ.ஜி.யாக இருந்த செந்தில்குமாரி, வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்