வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (26/11/2014)

கடைசி தொடர்பு:12:25 (26/11/2014)

பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாட முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு அனுமதி மறுப்பு!

வேலூர்: விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் 60ஆவது பிறந்த நாள் விழாவை சிறைச்சாலைக்குள் முருகன், சாந்தன், பேரறிவாளன் கொண்ட அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதனர்.

இந்நிலையில், விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் 60வது பிறந்த நாளை சிறையில் கொண்டாட வேண்டும் என்று அனுமதி கேட்டு மூவரும் சிறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்திருந்தனர்.

ஆனால், அந்த மனுவை பரிசீலனை செய்த உயர் போலீஸ் அதிகாரிகள், பிரபாகரனின் பிறந்த நாள் விழாவை சிறைச்சாலைக்குள் கொண்டாட மூவருக்கும் அனுமதி மறுத்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்