வெளியிடப்பட்ட நேரம்: 12:28 (26/11/2014)

கடைசி தொடர்பு:13:06 (26/11/2014)

குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: கனிமொழி பேச்சால் மாநிலங்களவையில் அமளி!

புதுடெல்லி: தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி பேசியதால் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

மாநிலங்களவை இன்று காலை கூடியதும் தி.மு.க உறுப்பினர் கனிமொழி, தர்மபுரி மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பெயர் நீக்கப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை நண்பகல் 12.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்