ரஜினி இணைந்தால் பா.ஜ.க பலம் கூடுமென உறுதியாக கூற முடியாது: தமிழிசை

கோவை: ரஜினிகாந்த் பா.ஜ.க.வில் இணைந்தால் கட்சியின் பலம் கூடும் என உறுதியாக கூற முடியாது என அக்கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறிய அவர், முதல்வர் பன்னீர்செல்வம் முழு அதிகாரத்துடன் செயல்பட வேண்டும் என்றார்.

அண்டை மாநில நீர் பிரச்னை அதிகரிப்பால் நீர்வளத்துறை அமைச்சரை நியமிக்க வேண்டும் என்று தெரிவித்த தமிழிசை, தமிழகம் ஒத்துழைத்தால் மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், பிரதமர் மோடி மீதான விமர்சனத்தை வைகோ நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழிசை செளந்தர்ராஜன் எச்சரிக்கை விடுத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!