சட்டசபையில் திமுக - அதிமுக மோதல்; அமளி!

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று திமுக  - அதிமுக உறுப்பினர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு, அமளி நிலவிய நிலையில், திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

சட்டசபையில் இன்று பேசிய திமுக சட்டப்பேரவை குழு தலைவர் மு.க. ஸ்டாலின், அவை விதி 110 ன் கீழ் முன்னர் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், இது தொடர்பாக ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். 

இந்நிலையில் அவைத்தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், அக்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!