Published:Updated:

`விரைவில் மயிலாடுதுறை தனிமாவட்ட அறிவிப்பு?!' - 36 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கும் தருமையாதீனம்

தருமையாதீனம்
தருமையாதீனம்

ஆதீனம் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள முளப்பாக்கம் கிராமத்தில் 36 ஏக்கர் இடத்தைத் தருவதாக 27 -வது குருமகாசந்நிதானம் ஒப்புதல் தெரிவித்தார்.

மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைய இருப்பதால், புதிய அலுவலகங்கள் கட்டுவதற்கு தருமையாதீனம் 36 ஏக்கர் நிலத்தை இலவசமாய் வழங்கியுள்ளது.

ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மயிலாடுதுறை ராதாகிருஷ்ணன், பூம்புகார் பவுன்ராஜ், சீர்காழி பாரதி ஆகியோர்
ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மயிலாடுதுறை ராதாகிருஷ்ணன், பூம்புகார் பவுன்ராஜ், சீர்காழி பாரதி ஆகியோர்

மயிலாடுதுறை பகுதி மக்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தனி மாவட்ட கோரிக்கையை அரசுக்கு விடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு வாரத்திற்கு முன் நாகை அருகே ஒரத்தூரில் நடந்த மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ”மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது" என்றார்.

இந்நிலையில், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை, ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மயிலாடுதுறை ராதாகிருஷ்ணன், பூம்புகார் பவுன்ராஜ், சீர்காழி பாரதி ஆகியோர் சந்தித்தனர். மயிலாடுதுறையினை தனி மாவட்டமாக அறிவித்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எஸ்.பி அலுவலகம் அமைப்பதற்கு ஆதீனம் இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

தருமையாதீனம்
தருமையாதீனம்

இதையடுத்து, ஆதீனம் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள முளப்பாக்கம் கிராமத்தில் 36 ஏக்கர் இடத்தைத் தருவதாக 27 -வது குருமகாசந்நிதானம் ஒப்புதல் தெரிவித்தார். தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் முளப்பாக்கம் கிராமத்தில் உள்ள இடத்தை, மயிலாடுதுறை தாசில்தார் முருகானந்தம் முன்னிலையில் பார்வையிட்டனர். மேலும், அந்த இடம் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்திற்கும் ஏதுவாகுமா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். விரைவில் தனி மாவட்ட அறிவிப்பு முதலமைச்சர் அறிவிப்பார் என மூன்று எம்.எல்.ஏக்களும் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு