தஞ்சை சரஸ்வதி மஹால் இணையதளம் முடக்கம்: பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு சதி? | Saraswathi Mahal Library web site are disabled, there is a rush.

வெளியிடப்பட்ட நேரம்: 14:38 (15/12/2014)

கடைசி தொடர்பு:14:38 (15/12/2014)

தஞ்சை சரஸ்வதி மஹால் இணையதளம் முடக்கம்: பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு சதி?

தஞ்சாவூர்: தஞ்சை சரஸ்வதி மஹால் நூலக இணையதளம் முடக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் சரஸ்வதி ஹால் நூலகத்தில், சோழர்கள், நாயக்க மன்னர்கள்  மற்றும் மராட்டியர்கள் ஆட்சிக் காலங்களைச் சேர்ந்த, ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓலைச்சுவடிகள் உட்பட மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் பராமரிக்கப் பட்டு வருகின்றன.  

இந்த நூலகம் சார்பில் 500க்கும் அதிகமான நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, www.tmssmlibrary.in
என்ற முகவரியில், நூலகத்தில் அதிகாரப் பூர்வமான இணையதளம் செயல்பட்டு வருகிறது.

இதன் மூலம், நூல்களை வாங்குவது  உட்பட, பல சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால் தற்போது  இந்த இணையதள பக்கத்திற்குள் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு என்ற பெயரில், மர்ம நபர்கள் ஊடுருவி இணையதளத்தை  முடக்கி உள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு மேலாக, நூலக இணையதள முகவரிக்கு சென்றால், அதன் முகப்பு பக்கத்தில், பாகிஸ்தான் தேசியக் கொடி பறக்கிறது.

அதன் கீழ், 'ஹேக் பை அமீர் ஹேக்ஸர்' என்று, ஆங்கிலத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும், 'பிரீடம் ஆப் காஷ்மீர் இஸ் ஹவர் மிசன்' என்ற வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த இணையதளம், மர்ம நபர்களால் ஊடுருவப்பட்டுள்ள தகவல், நேற்று முன்தினம், கலெக்டர் மற்றும் நூலக இயக்குனர் ஆகியோருக்கு தெரிய வந்துள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க நூலக இணையதளம் முடக்கப் பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்