வெளியிடப்பட்ட நேரம்: 13:09 (30/12/2014)

கடைசி தொடர்பு:13:09 (30/12/2014)

ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்ப நீதிமன்றம் தடை!

சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை எழுத்துத் தேர்வு மூலம் நிரப்ப உத்தரவிட்டதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்ப அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்தது. அதன்படி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. இதனிடையே, ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை எழுத்துத் தேர்வு மூலம் நிரப்ப வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஹரிபரந்தாமன், எழுத்துத் தேர்வு மூலம் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு இன்று விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்