கல்லூரிகளில் அழகிப் போட்டி நடத்த தடை: உயர் நீதிமன்றம் அதிரடி!

சென்னை: பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளில் அழகிப் போட்டி நடத்த தடை விதிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னையில் அண்ணா பல்கலைக் கழகம் நடத்திய அழகிப் போட்டியில் பட்டம் வென்ற மாணவிக்கு, தருவதாக கூறிய ரூ. 25 லட்சம் மதிப்புள்ள பரிசுகளை வழங்கவில்லை என்று புகார் தெரிவித்து, அந்த  மாணவி தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது.

அம்மாணவியின் மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளில் அழகிப் போட்டி நடத்த தடை விதித்ததோடு, வரும் 20 ஆம் தேதிக்குள் தமிழக அரசும், போட்டி நடத்திய பொறியியல் பல்கலைக் கழகமும் பதிலளிக்கவேண்டும் என்று  அதிரடி உத்தரவை பிறப்பித்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!