அகில இந்திய கார் பந்தயம்: கோவை மாணவர்களுக்கு விருது!

த்திய பிரதேசம் மாநிலம் பிதாம்பூரில் நடைபெற்ற கரடு முரடான பாதையிலான கார்பந்தயத்தில் கோவை குமரகுரு கல்லூரி மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது

அகில இந்திய அளவில், என்ஜீனியரிங் கல்லூரி மாணவர்களுக்கான கரடு முரடான சாலைகளில் நடத்தப்படும் கார்பந்தயத்தின் இறுதிச் சுற்று, மத்திய பிரதேச மாநிலம் பீதாம்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் அகில இந்திய அளவில் இருந்தும் நேபாளம் மற்றும் பூடான் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் 110 அணிகள் பங்கேற்றன.

இந்த போட்டியில் கோவை குமரகுரு கல்லூரியை சேர்ந்த கே.சி.டி. பாஜா குழுவினருக்கு, சிறந்த பாதுகாப்பு முறைகளை பின்பற்றிய அணிக்காக சுழற்கோப்பையுடன் 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. குழுவினருக்கு குமரகுரு கல்லூரி முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!