சிங்கப்பூரில் தமிழருக்கு 16 ஆண்டு சிறை!

சிங்கப்பூரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்டட தொழிலாளிக்கு 16 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தேவராஜன் (20) சிங்கப்பூரில் கட்டட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடன் 31 வயது அறிவழகன் என்பவரும் வேலை பார்த்து வந்தார். எனினும் இருவருக்கும் அதிக அறிமுகமில்லை.

இந்த நிலையில் அறிவழகனின் மணிபர்ஸ் காணாமல் போனது. இது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தேவராஜன், அருகில் கிடந்த பாறாங்கல்லை அறிவழகனின் தலையில் போட்டு கொலை செய்தார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு அறிவழகனின் உடலை ஒரு மேம்பாலத்தின் அடியில் இருந்து காவல்துறையினர் மீட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த சிங்கப்பூர் நீதிமன்றம், தேவராஜனுக்கு 16 ஆண்டு சிறைத் தண்டனையும், 12 கசையடி கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!