Published:Updated:

சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன்பிடித்ததால் 4 படகுகளுக்கு தீ! கடலூர் மீனவ கிராமத்தில் பரபரப்பு

கடலூர் மாவட்டத்தில் சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதைப் பயன்படுத்தி மீன் பிடித்த நான்கு படகுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

படகு தீ வைப்பு
படகு தீ வைப்பு

கடலூர் மாவட்டத்தில் சுருக்கு வலையைப் பயன்படுத்தி ஒரு சில கிராம மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். இந்த வலையைப் பயன்படுத்துவதால் மீன் வளம் மற்றும் மீன் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் என மீனவர்கள் சுருக்கு வலையைப் பயன்படுத்தக் கூடாது எனக் கூறி பலகட்ட போராட்டங்களை நடத்தினார்கள். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சுருக்கு வலையைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. ஆனால், இந்தத் தடையை மீறி ஒரு சில கிராம மீனவர்கள் அதைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர்

எரியும் படகு
எரியும் படகு

இந்நிலையில் சிதம்பரம் அருகே உள்ள அன்னங்கோயில் கிராம மீனவர்கள் சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று மீன் பிடிக்கச் செல்லாமல் போராட்டம் நடத்தி வந்தனர். அப்பொழுது அப்பகுதியில் சுருக்கு வலையைப் பயன்படுத்தி 3 படகுகள் மற்றும் ஒரு தோணியில் மீன் பிடித்து வந்ததைப் பார்த்த மீனவர்கள் ஆத்திரமடைந்தனர். பின்னர் அந்தப் படகுகளுக்கு தீ வைத்தனர்.

எரியும் படகு
எரியும் படகு
Vikatan
சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன் பிடிக்கக் கூடாது.
-கடலூர் மாவட்ட நிர்வாகம்

கடலோரத்தில் உள்ள திட்டுப் பகுதியில் படகுகளுக்கு தீ வைத்தால் தீயை அணைக்க முடியவில்லை, படகுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

எரியும் படகு
எரியும் படகு

இதனால், கடலூர் ஏ.டி.எஸ்.பி. பாண்டியன், சிதம்பரம் டி.எஸ்.பி. கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.