Published:Updated:

`கொரோனா பதற்றத்தில் மூலிகை மருந்து!' - கணவனின் செயலால் தீவிர சிகிச்சையில் மனைவி, 3 குழந்தைகள்

மதுரை அரசு மருத்துவமனை
மதுரை அரசு மருத்துவமனை

கொரோனா வைரஸ் பற்றிய அச்சத்தால், அதனால்தான் காய்ச்சல் வந்துவிட்டதோ என நினைத்த முத்துக்கருப்பன், வீட்டில் இருந்த மூலிகை மருந்தை திராவிடச் செல்வத்துக்குக் கொடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதாக ஏற்பட்ட பதற்றத்தால், தங்களுக்கு வந்த காய்ச்சலுக்கு மூலிகை மருந்து சாப்பிட்டவர்களின் உடல்நிலை மோசமானதால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பீதி
கொரோனா பீதி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குன்னுத்துப்பட்டியைச் சேர்ந்த முத்துக்கருப்பன்-கவிதா தம்பதியரின் மகன் திராவிடச் செல்வத்துக்குச் சாதாரண காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பற்றிய அச்சத்தால், அதனால்தான் காய்ச்சல் வந்துவிட்டதோ என நினைத்த முத்துக்கருப்பன், வீட்டில் இருந்த மூலிகை மருந்தை திராவிடச் செல்வத்துக்குக் கொடுத்துள்ளார்.

மதுரை அரசு மருத்துவமனை
மதுரை அரசு மருத்துவமனை

அது மட்டுமல்லாமல் மற்றவருக்கும் காய்ச்சல் பரவிடக் கூடாது என முன்னெச்சரிக்கையாக மனைவி கவிதா, மற்றொரு மகன், மகள் உட்பட நான்கு பேரும் மூலிகை மருந்தைச் சாப்பிட்டுள்ளனர்.

`கொரோனா பாதிப்பு; 4 நாள்கள்; உள்ளூர் பயணங்கள்!’- சுகாதாரத் துறை ரேடாரில் நெல்லை இளைஞர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே நான்கு பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமான முத்துக்கருப்பன் உடனே நான்கு பேரையும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிகிச்சையில் சிறுவன்
சிகிச்சையில் சிறுவன்

தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு