Published:Updated:

அரசுப் பள்ளி விடுதி மாணவிகளை 'ஏமாற்றிய' இளைஞர்கள் 4 பேர் போக்சோவில் கைது! - நடந்தது என்ன?

இளைஞர்கள் 4 பேர் போக்சோவில் கைது

அரசு விடுதி மாணவிகளை ஏமாற்றி பாலியல்ரீதியிலான வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்களை போலீஸார் கைதுசெய்தனர்.

அரசுப் பள்ளி விடுதி மாணவிகளை 'ஏமாற்றிய' இளைஞர்கள் 4 பேர் போக்சோவில் கைது! - நடந்தது என்ன?

அரசு விடுதி மாணவிகளை ஏமாற்றி பாலியல்ரீதியிலான வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்களை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
இளைஞர்கள் 4 பேர் போக்சோவில் கைது

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் பழனி அதன் சுற்றுவட்டாரத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், விடுதியில் தங்கியுள்ள பிளஸ் டூ மாணவிகள் சிலர் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கடந்த வாரம் புகார் எழுந்தது. இதையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு குழு அதிகாரிகள் மற்றும் ஆதி திராவிடர் நல ஆணைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

போக்சோ
போக்சோ

சம்பவம் நடந்தது தொடர்பாக புகார் எழுந்து ஒரு வாரமான நிலையில், வழக்கு பதிவுசெய்யப்படாமல் இருந்தது. 

இந்த நிலையில், மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் மாணவிகளிடம் விசாரணை நடத்தி மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி-யிடம் அறிக்கை சமர்ப்பித்து, புகாரளித்தனர். அதனடிப்படையில் பழநி அனைத்து மகளிர் போலீஸார், சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விசாரணையில் விடுதியின் பின்புறம் வசிக்கும் டிரைவர் ராகுல் (25), கேட்டரிங் தொழிலாளி பரந்தாமன் (24), கிருபா (23) மற்றும் கல்லூரி மாணவர் ஒருவரென 4 பேர் மாணவிகளை காதலிப்பது போல நடித்து அவர்களை வீட்டுக்கு வரவழைத்து பாலியல் வன்முறையில் ஈடுபட்டது தெரியவந்தது. கல்லூரி மாணவர் தவிர மற்ற மூவரும் திருமணம் முடிந்தநிலையில் தங்களுக்கு திருமணமாகவில்லை எனக் கூறி பழகியிருக்கின்றனர். இதையடுத்து அனைத்து மகளிர் போலீஸார், கல்லூரி மாணவர் உட்பட 4 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். 

போலீஸார் விசாரணை
போலீஸார் விசாரணை

இதனிடையே மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சண்முகம், பணியில் அலட்சியமாக இருந்த சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அமுதா, காவலர் விஜயா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.