``வணக்கம். கழக தேர்தலில் ஒன்றிய-நகர-பேரூர்-பகுதி-மாநகர செயலாளர் பொறுப்புக்கு தகுதியான இளைஞர் அணி நிர்வாகிகளை பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.” திமுக தலைமையில் இருந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டிருக்கும் செய்தி இது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உள்ளாட்சி தேர்தல் முடிந்த கையோடு, திமுக உட்கட்சி தேர்தலை நடத்தி வருகிறது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் என்ட்ரி கொடுக்க உள்ள அதேநேரத்தில், கட்சியிலும் அதற்கு ஏற்ப மாற்றங்களை செய்ய உள்ளனராம்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய திமுக நிர்வாகிகள் சிலர், “உட்கட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும்போதே, இளைஞரணி மற்றும் உதயநிதி ரசிகர் மன்றத்தில் உள்ளவர்களுக்கு கணிசமான பொறுப்புகள் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது நகராட்சி,

பேரூராட்சி தலைவர்கள் பதவி இளைஞரணிக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் தலைமையின் உத்தரவை மீறி, ஒரு சில இடங்களில் இளைஞரணியை ஓவர்டேக் செய்து, அந்தந்த பகுதி நிர்வாகிகள் அந்தப் பதவியை பிடித்துவிட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனால் உதயநிதி அப்செட்டானார். தற்போது ஒன்றிய, நகர, பேரூர், பகுதி மாநகர செயலாளர் பதவிகளில் இளைஞரணிக்கு 40 சதவிகிதம் ஒதுக்கிடு செய்யப்பட்டுவிட்டது. கோவை, திருப்பூர் போன்ற சட்டசபை தேர்தலில் சிறப்பாக செயல்படாத மாவட்டங்களில், மாவட்ட பொறுப்பாளர்கள் கூண்டோடு மாற்றப்பட வாய்ப்புள்ளது.

அதனால், அங்கு இளைஞரணியினருக்கு மாவட்ட செயலாளர் பதவி வரை கிடைக்கவும் வாய்ப்புள்ளது.” என்றனர். இந்த முடிவு இளைஞரணி மத்தியில் வரவேற்பைப் பெற்றாலும், சீனியர்கள் மத்தியில் வழக்கம்போல புகைச்சலை கிளப்பியுள்ளது.