மக்கள் பணி எதுவும் இல்லை; சமோசாவும் வடையும் மட்டும்தான்! | snaks attack madurai corporation dmk admk attack

வெளியிடப்பட்ட நேரம்: 18:09 (24/03/2015)

கடைசி தொடர்பு:18:36 (24/03/2015)

மக்கள் பணி எதுவும் இல்லை; சமோசாவும் வடையும் மட்டும்தான்!

மதுரை : மதுரை மாநகராட்சியில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது எதிர்ப்பு தெரிவித்த திமுக கவுன்சிலர்கள் தாக்கப்பட்டார்கள்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேசவிடாமல் தீர்மானங்களை நிறைவேற்றி சாதனை படைப்பதில் மதுரை மாநகராட்சி முதலிடத்தில் உள்ளது. அதிமுக மெஜாரிட்டி ஆக இருப்பதால் வேறு யாரும் எந்த பிரச்சனை பற்றியும் பேச முடியாது. மாநகராட்சி கூட்டங்களில் பேச வாய்ப்பளிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டும் விதமாக, ஒவ்வொரு கூட்டத்திற்கும் திமுக கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து வருவார்கள்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் தண்ணீர் பாட்டில், வடை சமோசாவை தூக்கி அவர்கள் மீது வீசுவார்கள். சாப்பிடுவதற்கு ஸ்நாக்ஸ் வாங்குவதை விட எதிர்க்கட்சி உறுப்பினர்களை தாக்குவதற்காகவே அன்றைய தினம் அதிகம் வடை, சமோசாவை வாங்கி வருவார்கள் அதிமுகவினர்.

ஜெயலலிதா முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டபோது, அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதிமுக கவுன்சிலர்கள் கருப்பு சட்டை போட்டு வந்தபோது, அவர்களை பார்த்து திமுகவினர் சிரிக்க, கடுப்பான அதிமுக கவுன்சிலர்கள் மன்றத்துக்குள் சண்டை போட்டனர்.

அதற்குப்பின் நீண்டகாலம் மாநகராட்சி கூட்டம் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில்தான் இன்று 2௦15 – 2௦16 ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிக்கப்பட்டது. இது மக்கள் விரோத ஆட்சி, மதுரை வளர்ச்சிக்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறி திமுக கவுன்சிலர்கள் கோஷம் போட்டபடி, கொடும்பாவி கொளுத்த முயன்றனர்.

இவர்களை உள்ளே தடுக்கும் முயற்சியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்கள் உள்ளே அனுமதிக்கப் படவில்லை. அதற்குள் அவர்கள் மீது தண்ணீர் பாட்டில்களை எடுத்து வீச ஆரம்பித்தனர். அடி வாங்க முடியாமல் வெளியில் வந்த திமுக கவுன்சிலர்கள், அதிமுக அரசுக்கு எதிராக கோஷம் போட்டபடி திரும்பி சென்றனர். நடந்த களேபரம் எதையும் கண்டுகொள்ளாமல் பட்ஜெட் அறிவிப்பை தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்தார் மேயர்.

செ.சல்மான்

படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்