அரசு இணையத்தில் நீக்கப்படாத 'முதல்வர் ஜெயலலிதா'!

சென்னை: தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இணையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் இன்னும் நீக்கப்படாமல் உள்ளது.

வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு கர்நாடக சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இதையடுத்து, ஜெயலலிதா வகித்து வந்த முதலமைச்சர் பதவியும், ஸ்ரீரங்கம் தொகுதியின் எம்.எல்.ஏ. பதவியும் பறிபோனது. தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் கடந்த ஆண்டு செப்டம்பர் 29ஆம்தேதி பதவியேற்றார்.

ஆனால், தமிழக அரசின் இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்றே பல மாதங்களாக இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்த இணையதளத்தில் ஜெயலலிதா பெயரை மாற்றிவிட்டு, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெற்றது.

இந்நிலையில், ஜெயலலிதா பதவி பறிக்கப்பட்ட சுமார் 6 மாதம் ஆகிவிட்ட நிலையிலும், தமிழக அரசின் 'செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இணையதளத்தில், ஜெயலலிதாவே இன்னும் தமிழக முதல்வர் என்பது போன்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சட்டசபை, மாநகராட்சி, நகர்மன்றம், காவல்துறை என தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஜெயலலிதா படம் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை நீக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், அரசு இணையதளத்திலும் ஜெயலலிதா பெயர் நீக்கப்படாமல் இருப்பது எதிர்கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!