Published:Updated:

`விசாரணைக்குச் சென்றார்; கொரோனா தொற்றியது!’- பெரம்பலூர் காவலரால் தனிமைப்படுத்தப்பட் 41 பேர்

பெரம்பலூர் காவல் நிலையம்
பெரம்பலூர் காவல் நிலையம்

காவலர், சொந்த ஊருக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவருக்குத் தொண்டை வலி, லேசான காய்ச்சல் ஏற்பட்டதால் ஆத்தூரில் காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துள்ளார்.

வி.களத்தூரில் பணிபுரிந்த காவலருக்கு, கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அவருக்குச் சிகிச்சை அளித்த அரசு மருத்துவர், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என 41 பேர், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

வி.களத்தூர் காவல்நிலையத்தில் கிருமி நாசினி தெளிப்பு
வி.களத்தூர் காவல்நிலையத்தில் கிருமி நாசினி தெளிப்பு

கொரோனோ வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன்படி, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள நாவக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். வி.களத்தூர் கிராமத்தில் உள்ள இரு இளைஞர்கள் டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்த நபர்களை அழைத்துச் செல்வதற்காகத் தலைமைக் காவலர் சென்றிருக்கிறார்.

அவர்கள் மூலம் கொரோனா தொற்று பரவியிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இந்தநிலையில் வி.களத்தூர் கிராமம் முழுவதும் சுகாதாரத்துறை அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டது. மேலும், வைரஸ் பரவலைத் தடுக்க கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. காவலருக்குக் கொரோனா தொற்று உறுதியானதால், காவல் நிலையத்துக்கு ஒரு நாளைக்கு ஐந்து முறை கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

பெரம்பலூர் காவல் நிலையம்
பெரம்பலூர் காவல் நிலையம்

காவல்நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டு அதன் அருகில் காவல்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பாதிக்கப்பட்டவர்களைத் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்து ஆத்தூர் ஆர்.டி.ஓ துரையிடம் கேட்டபோது, ``கொரோனாவில் பாதிக்கப்பட்ட தலைமைக் காவலர், சொந்த ஊரான நாவக்குறிச்சிக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவருக்குத் தொண்டை வலி, லேசான காய்ச்சல் ஏற்பட்டதால் ஆத்தூரில் காது, மூக்கு, தொண்டைப் பிரிவு அரசு மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துள்ளார். மருத்துவருக்கும் ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்ததில், நோய் அறிகுறி எதுவும் இல்லை.

சுழற்சி முறையில் போலீஸார்
சுழற்சி முறையில் போலீஸார்

போலீஸாரின் குடும்பத்தினர், அவரது உறவினர்கள் என 12 பேர், சேலம் அரசு மருத்துவமனையில், தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாவக்குறிச்சி கிராமத்தில் 38 பேர் மற்றும் ஆத்தூர் டாக்டர் குடும்பம் என மொத்தம் 41 பேரை அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி, கண்காணித்து வருகிறோம். அத்தோடு அவர்கள் வசித்து வந்த பகுதிகளையும் எங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருக்கிறோம். மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை" என்று முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு