Published:Updated:

Chess Olympiad : கோலாகலமாகத் தொடங்கிய செஸ் திருவிழா; பங்கேற்ற திரைப்பிரபலங்கள்!

திரைபிரபலங்கள்

இந்த செஸ் திருவிழாவைக் கோலாகலாமாகக் கொண்டாடும் விதமாக தலைநகர் சென்னையிலும், வேறு சில மாவட்டங்களிலும் செஸ் வடிவிலான அலங்காரங்கள், விளம்பரங்கள், கலை நிகழ்ச்சிகள் எனத் தமிழக அரசு அசத்தி வருகிறது.

Chess Olympiad : கோலாகலமாகத் தொடங்கிய செஸ் திருவிழா; பங்கேற்ற திரைப்பிரபலங்கள்!

இந்த செஸ் திருவிழாவைக் கோலாகலாமாகக் கொண்டாடும் விதமாக தலைநகர் சென்னையிலும், வேறு சில மாவட்டங்களிலும் செஸ் வடிவிலான அலங்காரங்கள், விளம்பரங்கள், கலை நிகழ்ச்சிகள் எனத் தமிழக அரசு அசத்தி வருகிறது.

Published:Updated:
திரைபிரபலங்கள்

சென்னை, மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க விழா இன்று மாலை 6 மணிக்கு (ஜூலை 28) நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலாகலமாகத் தொடங்கியது. இந்த விழாவில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ. மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தேவையான ஏற்பாடுகளைத் தமிழக அரசு கடந்த சில மாதங்களாகவே முழுவீச்சாக செய்து வருகிறது. இந்த செஸ் திருவிழாவைக் கோலாகலாமாகக் கொண்டாடும் விதமாக தலைநகர் சென்னையிலும், வேறு சில மாவட்டங்களிலும் செஸ் வடிவிலான அலங்காரங்கள், விளம்பரங்கள், கலை நிகழ்ச்சிகள் எனத் தமிழக அரசு அசத்தி வருகிறது.

தொடக்க நிகழ்ச்சி
தொடக்க நிகழ்ச்சி

இந்த விழா நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு சார்பில் 18 குழுக்கள் கவனித்து வருகின்றன.இந்தப் போட்டியில் 188 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் அதிகமான செஸ் வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

கோலாகலமாக தொடங்கிய இந்த செஸ் விழாவில் அரசியல் பிரபலங்கள் மட்டுமின்றி திரை பிரபலங்களும் கலந்துக்கொண்டுள்ளனர். இந்த தொடக்க விழா நிகழ்ச்சியை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நடிகர்கள் ரஜினிகாந்த், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கவிஞர். வைரமுத்து, கார்த்தி, ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!