வெளியிடப்பட்ட நேரம்: 20:25 (26/03/2015)

கடைசி தொடர்பு:20:50 (26/03/2015)

நியூட்ரினோ ஆய்வு பணிகளை மேற்கொள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை!

மதுரை: தேனியில் நியூட்ரினோ ஆய்வு பணிகளை மேற்கொள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

தேனி மாவட்டம், தேவாரம், பொட்டிப்புரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

இதையடுத்து, 'நியூட்ரினோ திட்டத்தால் தேனி பகுதியில் நில வளம் அழியும். மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பசுமைத் தொடர்களுக்கு பேரழிவு ஏற்படும். விவசாயம், தண்ணீர், வன விலங்குகளுக்குப் பாதிப்பு ஏற்படும். மனித உயிர்களுக்கு ஆபத்து நேரிடும். எனவே நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தடை விதிக்க வேண்டும் எனக் கூறி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், நியூட்ரினோ திட்டத்துக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயம். அதன்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெறும் வரை நியூட்ரினோ ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என இடைக்கால தடை விதித்து, வழக்கை ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில், இன்று மதுரை வந்திருந்த வைகோ இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், ''இது மக்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. மக்களுக்கு எதிராக துவக்கப்படும் எந்தவொரு திட்டத்தையும் நான் எதிர்ப்பேன். நீதிபதியின் உத்தரவு நகல் முழுதாக இன்னும் கிடைக்கவில்லை. அதில் என்ன மாதிரியான உத்தரவுகளை தெரிவித்துள்ளார்கள் என்பது தெரியவில்லை. இதை மீறி நியூட்ரினோ ஆய்வுப்பணிகளை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும்'' என்றார்.

செ.சல்மான்

படம்: பா.காளிமுத்து

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்