பனிமலையில் பலியான மலையேற்ற வீரர் மல்லி மஸ்தான் பாபு உடல் மீட்பு!

ண்டிஸ் மலைத் தொடரில் மலையேற்றத்தின்போது உயிரிழந்த இந்திய மலையேற்ற வீரர் மல்லி மஸ்தான் பாபுவின் உடல், அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள உயரமான சிகரங்களை 172 நாட்களில் ஏறியவர் என்ற சாதனையைப் படைத்த, இந்தியாவின் மிகச்சிறந்த மலையேறும் வீரர்களில் ஒருவரான மல்லி மஸ்தான் பாபு, கடந்த டிசம்பர் மாதம் 16-ம்தேதி அர்ஜென்டினா மற்றும் சிலி எல்லையில் அமைந்துள்ள ஆண்டஸ் மலைத்தொடரில் மலையேற்றம் செய்வதற்கு சென்றார்.மோசமான வானிலை காரணமாக மார்ச் மாதம் 24-ம்தேதி முதல் அவருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில் 11 நாட்களுக்குப் பின்னர் அவரது சடலம் கிடந்த இடம் ஏப்ரல் 3-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், அவரது உடல் பனி படர்ந்த மலையில் இருந்து பாதுகாப்பாக கீழிறக்கப்பட்டு, வடக்கு அர்ஜென்டினாவின் துக்குமன் நகரத்திற்கு கொண்டு வரப்பட்டது. 

தற்போது அங்குள்ள மருத்துவமனையில் மல்லி மஸ்தான் பாபுவின் உடல் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்த வார இறுதியில் அவரது உடல் இந்தியா கொண்டு வரப்பட்டு  சொந்த ஊரான ஆந்திர மாநிலம் நெல்லூரில் மல்லி மஸ்தான் பாபுவின் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!