வீடியோவை வைத்து மிரட்டி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம்!

தர்மபுரி: தர்மபுரி அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய 5 பேரை பிடித்து காவல்துறையினர் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே உள்ள குக்கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள மகளிர் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 8ஆம் தேதி மாலை, பள்ளி முடிந்து மாணவி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அந்த கிராமத்தில் உள்ள சுடுகாடு அருகே மாணவி சென்ற போது, அதே கிராமத்தை சேர்ந்த முபாரக், அரவிந்த் ஆகியோர் மாணவியை வழிமறித்துள்ளனர். பின்னர் அந்த மாணவியை சுடுகாட்டில் உள்ள புதர் பகுதிக்கு தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதை செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து யாரிடமாவது சொன்னால், வீடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிடுவோம். மேலும், உன் பெற்றோரையும், உன்னையும் கொலை செய்வோம் என்று மிரட்டியுள்ளனர். இந்நிலையில் முபாரக் மற்றும் அரவிந்த் ஆகியோர் அந்த ஆபாச வீடியோவை நண்பர்களான சந்தோஷ் (19), அருண்குமார் (19) ஆகியோரிடம் காண்பித்துள்ளனர். இதைப்பார்த்த சந்தோஷ், அருண்குமார், மற்றொரு நண்பர் ராகுல் மற்றும் போஸ் என்ற சந்திரபோஸ் ஆகிய 4 பேரும், 10ஆம் தேதி மாலையில் அந்த மாணவியை மிரட்டி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

தொடரும் டார்ச்சரால் தவித்த மாணவி, இது பற்றி தொண்டு நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து அமைப்பை சேர்ந்த ஆனந்தி, அம்பிகா ஆகிய நிர்வாகிகள், நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று மாணவியை சந்தித்து பேசினர். அப்போது மாணவி தனக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமையை கதறியழுதபடி தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த அமைப்பினர் தர்மபுரி எஸ்பி லோகநாதன் மற்றும் கலெக்டர் விவேகானந்தன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார்.

தர்மபுரி கலெக்டர் உத்தரவின் பேரில், நேற்று பாதிக்கப்பட்ட மாணவியிடம் அரூர் டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி, தர்மபுரி மகளிர் இன்ஸ்பெக்டர் சந்திரகாந்தா ஆகியோர் விசாரணை நடத்தினர். மேலும், பலாத்காரத்தில் ஈடுபட்ட முபாரக், போஸ், அருண்குமார், சந்தோஷ், மாணவியின் நண்பரான ராகுல் ஆகிய 5 பேரை காவல்துறையினர் பிடித்து வந்து விசாரணை நடத்தினர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து நேற்று இரவு விடிய விடிய விசாரணை நடத்தினர். இதில் மாணவியை பலாத்காரம் செய்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

ஆபாச வீடியோ இருந்த செல்போனையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பாலியல் பலாத்காரம், வன்கொடுமை தடுப்புசட்ட பிரிவு உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த மொரப்பூர் காவல்துறையினர் 5 பேரையும் கைது செய்தனர். அரவிந்த்தை தேடி வருகின்றனர். முபாரக், தனியார் கல்லூரியில் பிபிஏ 2ம் ஆண்டு படித்து வருகிறார். மருத்துவ பரிசோதனைபாலியல் பலாத்காரத்திற்கு ஆளான மாணவி தொப்பூர் குறிஞ்சி நகரில் உள்ள அரசு இல்ல காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்று மருத்துவ பரிசோதனை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!