வெளியிடப்பட்ட நேரம்: 08:49 (16/04/2015)

கடைசி தொடர்பு:12:47 (16/04/2015)

ஜாலியாக பயணம் செய்ய சென்னை-நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

சென்னை: சென்னை எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக நெல்லை-சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, நெல்லை-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (வ.எண்.06006), நெல்லையில் இருந்து வருகின்ற மே மாதம் 1 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 10.55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.55 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

மறுமார்க்கமாக சென்னை எழும்பூர்-நெல்லை சிறப்பு ரயில் (06007) மே 2 ஆம் தேதி (சனிக்கிழமை) இரவு 10.45 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு நெல்லையை சென்றடையும்.

சென்னை எழும்பூர்-நெல்லை சிறப்பு ரயில் (வ.எண்.06008) எழும்பூரில் இருந்து மே 4 ஆம் தேதி (திங்கட்கிழமை) இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் பிற்பகல் 12.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.

நெல்லை-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (வ.எண்.06009) மே 10 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, அடுத்தநாள் காலை 7.20 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

மறுமார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்(06010), மே 11 ஆம் தேதி (திங்கட்கிழமை) இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு நெல்லையை சென்றடையும்.

இதேபோல், நெல்லை-சென்னை எழும்பூர் பிரீமியம் சிறப்பு ரயில் (வ.எண்.00603) மே மாதம் 3 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது" என்று கூறப்பட்டு உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்