கண்ணகி கோவில் திருவிழா: கெடுபிடி காட்டும் கேரளா! | kannagi temple festival celeberation: Kerala govt restriction against tamilian customs

வெளியிடப்பட்ட நேரம்: 15:54 (16/04/2015)

கடைசி தொடர்பு:16:30 (16/04/2015)

கண்ணகி கோவில் திருவிழா: கெடுபிடி காட்டும் கேரளா!

தேனி: தமிழக்காப்பியங்களில் கற்புக்கு அரசியாக வணங்கப்படும் கண்ணகியின் கோவில் தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழக பகுதியில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவில்,  தமிழ் மன்னர்களான மூவேந்தர்களில் சேரமன்னன் செங்குட்டுவன் கட்டியதாக வரலாறு.

இருப்பினும் கேரள எல்லைக்கருகில் இருப்பதால், கோவிலுக்கு தமிழர்கள் வந்துபோக, கேரள பாதைகளை பயன்படுத்த வேண்டியதிருப்பதால் விழாக் காலங்களில் கேரள அரசின் கெடுபிடிகள் அதிகமாக இருக்கும். சிறப்புமிக்க இக்கோவில் திருவிழா, ஒவ்வொரு வருடம் சித்திரை முழுநிலவு அன்று  ஒருநாள் மட்டும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு கண்ணகி கோவில் திருவிழா, வரும் மே மாதம்  4 ம் தேதி நடக்கிறது. வழக்கம்போல் கேரள அரசு, இந்த ஆண்டு பக்தர்கள் மொட்டை அடிப்பதை தவிர்க்க வேண்டும் என்ற புதிய நிபந்தனையை விதித்துள்ளது.

பல நெடுங்காலமாக பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வரும் கண்ணகி கோவில் விழாவில், பக்தர்கள் மொட்டை அடிக்க தடைவிதிக்கப்பட்டிருப்பது பக்தர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி மற்றும் படங்கள் : வீ.சக்திஅருணகிரி 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close