பேஸ்புக் பக்கம் தொடங்கினார் ராமதாஸ்!

சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேஸ்புக் சமூக வலைதளத்தில் தனிப் பக்கம் தொடங்கியுள்ளதாக பாமகவின் தலைமைநிலைய செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  


 

அந்தக் குறிப்பில்," பா.ம. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று மாலை அவரது 'பேஸ்புக் பக்கத்தை https://www.facebook.com/DrRamadoss என்ற முகவரியில் தொடங்கினார். சில மணி நேரங்களில் சுமார் 3300 பேர் இந்த பக்கத்திற்கு வந்து விருப்பம் தெரிவித்தனர்.

டாக்டர் ராமதாஸ் வெளியிடும் அறிக்கைகள், டுவிட்டர்கள், பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பான நிகழ்வுகள் ஆகியவை இனி இந்த பக்கத்தில் வெளியிடப்படும்.

டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே டுவிட்டர் கணக்கை https://twitter.com/drramadoss என்ற முகவரியில் தொடங்கியுள்ளார். இதுவரை சுமார் 6000 பேர் அவரது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடர்கின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!