முத்துக்குமாரசாமிக்கு, அக்ரி கிருஷ்ணமூர்த்தி நெருக்கடி கொடுத்தாரா? உதவியாளர் பரபரப்பு வாக்குமூலம்! | Muthukumarasamy murder case: Agri Krishnamurthy assistant confession!

வெளியிடப்பட்ட நேரம்: 16:07 (18/06/2015)

கடைசி தொடர்பு:17:35 (18/06/2015)

முத்துக்குமாரசாமிக்கு, அக்ரி கிருஷ்ணமூர்த்தி நெருக்கடி கொடுத்தாரா? உதவியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

நெல்லை: நெல்லை வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமிக்கு அப்போதைய அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, நெருக்கடி கொடுத்தாரா என்பது குறித்து, அவரது உதவியாளர் நீதிமன்றத்தில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தலைமை பொறியாளர் செந்தில் ஆகியோர் 60 நாள் சிறைவாசத்துக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில், அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அரசுத் தரப்பு உதவியாளராக இருந்த பாண்டியன் என்பவர், சங்கரன்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி நீதிபதி சுரேஷ் முன்னிலையில் ரகசிய வாக்கு மூலம் அளித்துள்ளார்.

"வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அலுவலக ரீதியாக சில முறை அவரிடம் தொலைபேசியில் பேசியது உண்மைதான். ஆனால், பணியாளர் நியமனம் தொடர்பாகவோ, பண விவகாரம் குறித்தோ அவரிடம் எதுவும் பேசியதில்லை.

அப்போது அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முத்துக்குமாரசாமிக்கு நெருக்கடி கொடுத்தாரா என எனக்கு எதுவும் தெரியாது. உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் யாரும் அவருக்கு நெருக்கடி கொடுத்தார்களா என்பதும் எனக்கு தெரியாது " எனக் கூறியதாக காவல்துறை வட்டாரத் தகவல் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமலும், விசாரணை எதுவும் நடைபெறாமலும் கிடப்பில் போடப்பட்டிருந்த முத்துக்குமாரசாமி  தற்கொலை வழக்கை, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் மட்டுமே நியாயம் கிடைக்கும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், தற்போது, அக்ரி கிருஷ்ணமூர்த்தி உதவியாளர் பாண்டியன் வாக்குமூலம் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-ஆண்டனிராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்