இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் திடீர் கைது!

விழுப்புரம்: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் இஸ்லாமிய இளைஞர் ஒருவர், போலீசார் விசாரணையின்போது இறந்தது தொடர்பாக, அப்பகுதி இஸ்லாமியருக்கும், போலீசாருக்கும் இடையே கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின்போது, போலீஸ் வாகனமும், டாஸ்மாக் கடையும் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

மேலும், கலவரத்தை தடுக்க முயன்ற வேலூர் எஸ்.பி.செந்தில்குமாரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட போலீசார் மீது கலவரத்தில் ஈடுபட்டவர்கள் கல்வீசி தாக்கியதில், அவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்ட நிலையில், 2 ஐ.ஜி., 7 டி.எஸ்.பி., 12 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீசார் அதிகாரிகள் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆம்பூர் ஏற்பட்ட கலவரத்தையடுத்து, அங்கு முக்கிய தலைவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விழுப்புரத்தில் தனது கட்சி தொடர்பான கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், அங்கிருந்து ஆம்பூர் பகுதிக்கு தடையை செல்ல முயன்றதாகக் கூறி, திருக்கோவிலூரில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

-ஆ.நந்தகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!