ஹெல்மெட் விழிப்பு உணர்வு: மாணவ, மாணவிகள் பேரணி!

மிழகத்தில் நாளை முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வாகன ஓட்டிகளுக்கான விழிப்பு உணர்வு நிகழ்வினை இன்று காலை திருவள்ளுவர் பத்திரிகையாளர் சங்கமும், தமிழக போக்குவரத்து காவல்துறையும் இணைந்து நடத்தியது.
 

சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே, அடையார் போலீஸ் உதவி ஆணையர் அன்வர் பாஷா தலைமையில் நடந்த இந்த பேரணியில் நூற்றுக்கும் அதிகமான பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

அவர்கள் தங்கள் கைகளில், 'இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணிக்க வேண்டாம், இருசக்கர வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவதை தவிர்க்கவும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம், ஹெல்மெட் கட்டாயம் அணியவும், சாலை விதிகளை பின்பற்றவும், அளவான வேகத்தில் முந்திச் செல்பவர்களுக்கு வழிவிடவும் - எனும் வாசகங்கள் கொண்ட போஸ்டர்களை ஏந்தியபடி வாகன ஓட்டிகளுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தினர்.
 

உதவி ஆணையர் அன்வர் பாஷா, வாகன ஓட்டிகளிடம் விழிப்பு உணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். திருவள்ளுவர் பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் அ.ராஜா, ஈ.சி.ஆர்.சங்கர் உள்பட உறுப்பினர்களும், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செல்லத்துரை மற்றும் காவலர்களும் துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்கள்.

- மு.செய்யது முகம்மது ஆசாத்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!