பூரண மதுவிலக்கு கோரி 2 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற குத்து விளக்கு பூஜை! | Grand Pooja contested by 2000 womens, demands for prohibition

வெளியிடப்பட்ட நேரம்: 15:48 (15/07/2015)

கடைசி தொடர்பு:16:08 (15/07/2015)

பூரண மதுவிலக்கு கோரி 2 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற குத்து விளக்கு பூஜை!

விருதுநகர்: விருதுநகரில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, 2 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற குத்து விளக்கு பூஜை நடந்தது.

காங்கிரஸ் கட்சித்தலைவரும், முன்னாள் முதல்வருமான காமராஜரின் 113வது பிறந்த நாள் விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு, விருதுநகரில் உள்ள காமராஜர் இல்லத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நாடார் மகாஜன சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவின் ஒரு அம்சமாக, விருதுநகர் கே.வி.சாலா மேல்நிலைப்பள்ளியில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி  2 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற குத்து விளக்கு பூஜை நடந்தது.

தமிழகத்தில் மதுவிலக்கு தொடர்பான விழிப்புணர்வு வலுப்பெற்றுவருவதையே இது உணர்த்துகிறது.

- எம்.கார்த்தி
படங்கள்:
ஆர்.எம்.முத்துராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்