Published:Updated:

`அடுத்த 5 நாள்களுக்குக் கனமழை; நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!' - வானிலை ஆய்வு மையம்

வட மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும். தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.

தமிழகத்தில் 15-ம் தேதி வரை பல்வேறு இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 11.10.2021 சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலியில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் டெல்டா பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். வட மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும். தென் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அடுத்த 24 மணி நேரத்துக்கு அந்தமான் கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டிருக்கிறது.

கனமழை எச்சரிக்கை; தமிழகத்துக்கு இரண்டு நாள் ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம்!
மழை
மழை

நாளை 12.10.2021 செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மதுரை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, டெல்டா பகுதிகளில் இடி, மின்னலுடன்கூடிய கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை

நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் அக். 13-ம் தேதி இடி, மின்னலுடன் கனமழையும், 14, 15 தேதிகளில் இடி, மின்னலுடன் மிக கனமழையும் பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த நாள்களில் மண் சரிவு ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்திருக்கிறார். அவர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 13, 14 -ம் தேதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். மற்ற மேற்குத் தொடர்ச்சி மாவட்டங்களில் 13, 14-ம் தேதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. 15-ம் தேதி தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், மதுரை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை
மழை

மீனவர்கள் நாளையும், நாளை மறுநாளும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு தமிழகத்தில் இதுவரையில் 5 சென்டிமீட்டருக்கு மாறாக 9 சென்டிமீட்டர் மழை கூடுதலாகப் பெய்திருக்கிறது. சென்னையில் மட்டும் வழக்கத்தைவிட 115% அதிக மழை பதிவாகியிருக்கிறது. புதுச்சேரியிலும் கூடுதல் மழை பெய்துள்ள நிலையில் தென் மாவட்டமான தூத்துக்குடியில் மட்டும் 50% குறைவான மழை பதிவாகியிருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் மழையுடன் பனியும் பொழிவதால் மக்கள் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு