Published:Updated:

``அரிசிக்கான ஜிஎஸ்டி; திரும்பப் பெறக் கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்" - வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா

வணிகர் சங்க ஆண்டு விழாவில் பேசிய விக்கிரமராஜா

அரிசி உள்ளிட்ட உணவுப்பொருள்களுக்கான 5 சதவிகித ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார்.

``அரிசிக்கான ஜிஎஸ்டி; திரும்பப் பெறக் கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்" - வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா

அரிசி உள்ளிட்ட உணவுப்பொருள்களுக்கான 5 சதவிகித ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார்.

Published:Updated:
வணிகர் சங்க ஆண்டு விழாவில் பேசிய விக்கிரமராஜா

ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்க ஆண்டு விழாவில் கலந்துகொண்ட வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசும்போது, ``மத்திய அரசு அரிசி, பால், தயிர் உள்ளிட்ட சில உணவுப்பொருள்களுக்கும் 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதித்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. இதனால் சாமானிய மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். இந்த 5 சதவிகித ஜிஎஸ்டி வரியைத் திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 22-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ஒன்றிணைத்து ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறோம். இந்தப் போராட்டத்துக்கும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லையென்றால் எங்களின் அடுத்தகட்ட போராட்டம் இன்னும் தீவிரமாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆர்ப்பாட்டத்துக்கு முன்பு அரசின் திரும்பப் பெறும் அறிவிப்பு வந்தால், போராட்டத்தை வாபஸ் பெறவும் தயாராக இருக்கிறோம். அதேபோல் நேரடியாக விதிக்கப்படும் செஸ் வரியை தமிழ்நாடு முதல்வர் திரும்பப் பெற வேண்டும். குப்பை வரி, தொழில் வரி என வரிகளைப் பிரித்து போடாமல், ஒரே வரியாக லஞ்சம், லாவண்யம் இன்றி லைசென்ஸ் வழங்க வேண்டும்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விக்ரமராஜா
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விக்ரமராஜா

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கு அரசு தடைவிதித்திருக்கிறது. இதை வியாபாரிகள் வரவேற்கிறோம். ஆனால் பல்நோக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் விற்பனை செய்யும் உணவுப்பொருள்கள் பலவற்றை, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளைத்தான் பயன்படுத்துகின்றன. அவற்றையும் தடைசெய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த விக்கிரமராஜா
செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த விக்கிரமராஜா

தமிழக டிஜிபி அறிவித்துள்ளபடி, மாநிலம் முழுவதும் 24 மணி நேரமும் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகம் அதிகரிப்பால் சிறு வணிகர்கள் முதல் பெரிய வணிகர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு பெரிய நிறுவனங்கள் குறைந்த விலைக்குப் பொருள்களை விற்பனை செய்வதாகக் கூறி மோசடி செய்கின்றனர். இதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். இந்த மோசடியால் பொதுமக்கள் மட்டுமின்றி சாமானிய வியாபாரிகளும் பாதிக்கப்படுகின்றனர். அதனால் சாமானிய வியாபாரிக்கும், அதானி, அம்பானிக்கும் ஒரே மாதிரியான சட்டம் கொண்டுவர வேண்டும்” எனக் கூறினார்.

அரிசிக்கான ஜிஎஸ்டி-ஐ திரும்பப் பெறக் கோரி தமிழ்நாட்டிலுள்ள அரிசி ஆலைகள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவிருப்பது குறிப்பிடத்தக்கது.