சசிபெருமாளால் மூடப்பட்ட மதுக்கடையை வேறு இடத்தில் திறக்க எதிர்ப்பு: விஜயதாரணி எம்எல்ஏ கைது! | Vijayatharani MLA arrested!

வெளியிடப்பட்ட நேரம்: 19:48 (03/08/2015)

கடைசி தொடர்பு:19:48 (03/08/2015)

சசிபெருமாளால் மூடப்பட்ட மதுக்கடையை வேறு இடத்தில் திறக்க எதிர்ப்பு: விஜயதாரணி எம்எல்ஏ கைது!

கன்னியாகுமரி: சசிபெருமாள் போராடியதன் மூலம் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை வேறு இடத்தில் திறக்க எதிர்ப்பு தெரிவித்த விஜயதாரணி எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகேயுள்ள உண்ணாமலைக் கடையில் டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்று இயங்கி வந்தது. இந்த கடையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் பல வருடங்களாக போராடி வந்தது.

இந்நிலையில், கடந்த 31ஆம் தேதி இந்த மதுபானக் கடையை மூடக்கோரி காந்தியவாதி சசிபெருமாள் அங்குள்ள செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார். அப்போது அவர் திடீரென மரணம் அடைந்தார்.

இதையடுத்து, அந்த டாஸ்மாக் மதுபானக் கடை மூடப்பட்டது. மேலும், கன்னியாகுமரி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மதுவுக்கு எதிரான போராட்டங்கள் வலுப் பெற்று வருகிறது.

இந்நிலையில், உண்ணாமலைக்கடையில் இயங்கி வந்த மதுபானக் கடை பள்ளியாடிக்கு மாற்றப்பட்டது. பள்ளியாடியில் இந்த டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி தலைமையில் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, காவல்துறையினர் விஜயதாரணி உள்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்