வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (06/08/2015)

கடைசி தொடர்பு:17:42 (06/08/2015)

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை வழக்கு: உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: இரண்டு முறை தண்டனை குறைப்பு பெற்றவர்களை விடுதலை செய்ய, மாநில அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்த முடியுமா? என ராஜீவ் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, 4வது நாளாக இன்று தனது வாதத்தை தொடர்ந்தார்.

அப்போது, அவரிடம் சில கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.

குற்றவாளிகளின் குடும்ப சூழலைக் கருத்தில் கொண்டோ அல்லது குற்றவாளியின் நன்னடத்தைகளைக் கருத்தில் கொண்டோ விடுதலை செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவித்த நீதிபதிகள், அதே நேரம் மாநில அரசு மத்திய அரசின் அல்லது நீதிமன்றத்தின் ஆலோசனையை பெற வேண்டியதை கட்டாயமாக்கலாமா என்று கேள்வி எழுப்பினர்.

ராஜீவ்  கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோர் ஏற்கனவே இரண்டு முறை தண்டனைக் குறைப்பு பெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்நிலையில் மூன்றாவது முறை தண்டனை குறைப்பு அளிக்க மாநில அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்த முடியுமா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்