மக்கள் ஜனாதிபதிக்கு மக்களே அமைத்த சிலை!

ஞ்சை அருகே மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கும் மக்களே அமைத்த சிலை திறந்து வைக்கப்பட்டது.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் கடந்த மாதம் மறைந்தார். இதையடுத்து அவருக்கு நாட்டின் பல பகுதிகளில் சிலை உருவாக்கப்பட்டு நிறுவப்பட்டு வருகிறது. மக்கள் மனம் கவர்ந்த தலைவரான அவருக்கு, பல கிராமங்களில் மக்களே விரும்பி சிலை வடிவமைத்து, நிறுவி வருகின்றனர்.

அந்த வகையில் தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே  கண்ணுகுடி கிராமத்தில், அப்துல் கலாமுக்கு சிலை நிறுவ அந்த கிராம மக்கள் முடிவு செய்திருந்தனர். சிலை வடிவமைப்பு பணிகள் முடிவடைந்ததையடுத்து, நேற்று சிலையின் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்ட திருச்சி புனித. ஜோசப் கல்லூரியின் முன்னாள் முதல்வர்  ஜான் பிரிட்டோ, அப்துல் கலாமின் சிலையை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கிராம மக்கள், அப்துல் கலாமின் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!