போலீஸ் தாக்குதலில் விஜயதாரணி எம்எல்ஏ காயம்! | Police attack on Congress MLA Vijayadharani

வெளியிடப்பட்ட நேரம்: 14:46 (02/09/2015)

கடைசி தொடர்பு:16:44 (02/09/2015)

போலீஸ் தாக்குதலில் விஜயதாரணி எம்எல்ஏ காயம்!

சென்னை: சட்டமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விஜயதாரணி எம்.எல்.ஏ. மீது காவல்துறையினர் தாக்கியதில், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொழிற்சங்கள் இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்துவது குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், இதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து, வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சியினர் சட்டமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இவர்களின் போராட்டத்தை தடுக்க முயன்ற காவல்துறையினர், வாகனங்களுக்கு போடும் தடுப்பை, எதிர்க்கட்சியினரின் மீது வேகமாக இறக்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. விஜயதாரணி தலையில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, தனது தலையில் காயம் ஏற்பட காரணமாக இருந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, காவல்துறையினருடன் விஜயதாரணி எம்.எல்.ஏ. வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால், சட்டமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து, விஜயதாரணி எம்.எல்.ஏ. சிகிச்சைக்காக ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்